நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு,
கடந்த ஐந்து நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, 071- 8598888 என்ற வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட முடியும் என ஆகஸ்ட் 13 ஆம் திகதி பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார்.
அதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்