யாழை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெப்பற்றிக்கொலாவ பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தினை சேர்ந்த 34 வயதுடைய முகுந்தன் என்ற பொலிஸ் விசேட பிரிவினை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹெப்பற்றிகொலாவ பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நேற்று (8) நீராட சென்றவேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தமிழர் பகுதி
சுமார் பத்து ஆண்டுகளாக பொலிஸ் விசேட பிரிவில் கடமையாற்றி வந்த இவர் தமிழர் பகுதிகளிலும் கடமைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இவரது உடலம் ஹெப்பற்றிகொலாவ மருத்துவமனையில் பிரதேச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.