2025 ஆம் ஆண்டில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் விவசாயம் சாராத நடவடிக்கைகளைக் கணக்கெடுப்புக்கு உள்ளடக்கும் வகையில் பொருளாதாரக் கணக்கெடுப்பு 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடாத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2013/14 ஆம் ஆண்டில் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் இறுதியாகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கணக்கெடுப்பில் திரட்டப்பட்ட தரவுகளை காலத்தோடு தழுவியதாக இற்றைப்படுத்துவதற்காக விவசாயம் மற்றும் விவசாயம் சாராத பொருளாதாரச் செயற்பாடுகளை வேறு வேறாக இரண்டு கட்டங்களாக உள்ளடக்கும் வகையில் திணைக்களத்தால் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளது.
அதற்கிணங்க, 2025 ஆம் ஆண்டில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் விவசாயம் சாராத நடவடிக்கைகளைக் கணக்கெடுப்புக்கு உள்ளடக்கும் வகையில் பொருளாதாரக் கணக்கெடுப்பு 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.