- நிமல் லான்சா குற்றச்சாட்டு
இஸ்மதுல் றஹுமான்
பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்கு அதனை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அதிகாரத்தை கைபற்ற வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிரைவேற்ற இயலாமல் உள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது சந்தையில் அரிசி, முட்டை, தேங்காய் உட்பட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வியாபார மாபியாக்கள் மற்றும் கமிஷன் பெறுவதை நிறுத்தி அதன் நண்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் மேடைகளில் கூறினார்கள். இதுவரை வர்த்தக மாபியாக்களையோ கமிஷன் எடுப்பதையோ கட்டுப்படுத்த முடியவில்லை.
இவற்றைப் கட்டுப்படகத்துவதன் மூலம் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் என்ற கருத்து மக்கள் மயபடுத்தப்பட்டது. இதனை நம்பி மக்கள் வாக்களித்தாலும் தற்போது மக்கள் வாக்களித்தது குற்றம்போல் உனருகிறார்கள்.
அளித்த வாக்குறுதிகளை நிரைவேற்ற முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை விமர்சித்தாலும் ஜனாதிபதி அநுர குமாரவின் அரசுக்கு தற்போது ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
வாழ்கைச் செலவு உயர்வுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பு வழங்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் இன்று சம்பள உயர்வு என்பது கணவாகவுள்ளது.
கேஸ், மின்சாரம், வரி குறைக்கப்படும் எனக் கூறினாலும் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதாக தெரியவில்லை. அதற்கான வேலைத்திட்டமும் இல்லை.
நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக மக்களை கடனாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.