கடந்த மாதம் பொரளை சீவலியாபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிறுவன் ஒருவர் நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த 17 வயதுடையவரே இவ்வாறு சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடையவரென்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.