பொரளையில் நாளை (07) விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணியின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வையொட்டி விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் இந்நிகழ்வில் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, நாளை (07) பிற்பகல் 03 மணி முதல் பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள கின்சி வீதி சந்திப்பிலிருந்து நந்ததாச கோதாக்கொட சந்திப்பு வரை கனரக வாகனங்கள் நுழைவதை மட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

July 6, 2025
0 Comment
7 Views