(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அரசின் வேலைத்திட்டங்களில் ஒன்றான விவசாயிகளின் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், விவசாய அமைச்சு மற்றும் உலக வங்கியின் அனுசரணையின் கீழ் குளங்கள் மற்றும் வாவிகளினுடைய புனர்நிர்மாணம் தொடர்பாக பொத்துவில் பிரதேச எல்லைக்குரிய 08 குளங்கள், அணைக்கட்டுக்களை நிர்மாணிக்கும் பணிகளைப் பார்வையிடுவதற்காக சமூக வலுவூட்டல் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ, இலங்கை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு ஆரம்ப கட்டப் பணிகளைப் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில், விவசாய அமைச்சின் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள் அத்தோடு, பொத்துவில் பிரதேசத்தின் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஆதம் சலீம், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான மஹ்ருப் மற்றும் புனிதன் உட்பட விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.