26.02.2024 எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியை வகித்த ரொஷான் குமார (வயது 51) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
எனினும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் எல்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










