கடுவலை, வெலிவிட்ட பகுதியில் உள்ள விருந்தகமொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் 21 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த விருந்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் 20 ஆண்களும் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது அதிகாரிகள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
குறித்த விருந்துபசாரம் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள், சட்டவிரோதப் பொருட்கள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு கோரியுள்ளனர்.