ஹஜ் கடமைக்காக இம்முறை மக்கா நகர் சென்ற இலங்கை ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின்னர் மக்கா நகரிலுள்ள வரலாற்று பிரசித்திபெற்ற இடங்களை, பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில்
பேருவளை நவ்பர் ஏசியன் டிரவல்ஸினால் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற ஹாஜிகள் , இறையில்லமான புனித கஃபாவுக்கு பலகோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டு அணிவிக்கப்படுகின்ற “கிஸ்வதுல் கஃபா” திரை சீலை தயாரிக்கப்படுகின்ற நிறுவன காட்சியகத்திற்கு (20) விஜயம் செய்தனர்.
மேற்படி நிறுவன பணிப்பாளர் அல் உஸ்தாத் அஹமட் சுவைஹிரியிடம் , டிரவல்ஸ் ஏற்பாட்டாளர் அல்ஹாஜ் நவ்பர் விடுத்த வேண்டுகோளின் பேரில் மேற்படி அனுமதி பெறப்பட்டது. ஹாஜிகள் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டதோடு தேவையான விளக்கங்களும் வருகை தந்தோருக்கு அரபு மொழியில் வழங்கப்பட்டன.
இதனை ஹஜ் நிறுவனத்தில் பிரதம வழிகாட்டியாக சென்ற மவ்லவி அப்துல் ரஹ்மான் ஹாபிஸ் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்து வழங்கினார். இம்முறை இலங்கையிலிருந்து சுமார் 3500 ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றுள்ளனர். இவர்கள் நாட்டுக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி விஜயத்துக்கு பூரண அனுமதியை பெற்றுத்தந்த மக்கா, மதீனா பகுதி ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் வாஹித் அலி கத்தாபிக்கு டிரவல்ஸ் ஏற்பாட்டாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

