கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின் 8 கால்வாய் பகுதியில், அரவியார் நகரிலிருந்து உருத்திரபுரம் நோக்கிச் சென்ற பேருந்திலிருந்து நேற்று (18) இரவு பயணியொருவர் தவறி விழுந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞனே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆடை நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்திலிருந்தே இளைஞன் தவறி விழுந்துள்ளார்.
குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.










