இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியவாறு பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு பற்றிய முறைசார்ந்த, சட்டரீதியான ஏற்பாடுகள் இதுவரை நடைமுறையில் இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், சமகாலத் தேவையாகவுள்ள குடும்ப மட்ட மாற்று வழிப் பாதுகாப்பு முறையாகவுள்ள ஊட்டமளிக்கும் பாதுகாப்பு (பெற்றோர் பாதுகாவலர் முறை) எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்காக கருத்தாக்க பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தேசப் பொறிமுறை மூலம், பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு முறையை ஸ்தாபித்தல் மற்றும் தொலைதூரப் பெற்றோர் பாதுகாவலர் ஒத்துழைப்புக்கள் போன்ற முக்கிய இரண்டு முறைகளின் கீழ் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த கருத்தாக்கப் பத்திரத்தின் அடிப்படையில், பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்புக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பதில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.