இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு, பெரியமுல்லை லாசரஸ் வீதி காபட் இட்டு மறுசீரமைப்பு வேலை நேற்று 1ம் திகதி பிரதி அமைச்சர் சுகத் திலகரத்னவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
27 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 950 மீட்டர் தூரம் காபட் இடும் இப்பணி நீர்கொழும்பு இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது.
அபிவிருத்தி வேலையை ஆரம்பித்ததன் பின்னர் நீர்கொழும்பு தொகுதிக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்” மறுமலர்ச்சிக்கான பாதை” எனும் திட்டத்தில் 2026 ஆண்டு வரவு செலவு திட்டத்தில் கிராமிய வீதி அபிவிருத்திற்காக 24000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக 5000 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு தொகுதியில் பெரியமுல்லை, லாசரஸ் வீதி காபட் இட்டு மறுசீரமைப்பு வேலைகளை இன்று ஜனவரி முதலாம் திகதி ஆரம்பித்தோம். 27 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 950 மீட்டர் தூர இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
இவ்வாறு நாடு பூராகவும் 76 கிராமிய வீதிகளின் மறுசீரமைப்பு வேலைகள் இன்று ஆரமொபிக்கப்படுகின்றன.
முழு நாடும் ஒன்றாக என்ற அடிப்படையில் நாட்டின் முறையான அபிவிருத்தி திட்டங்கள் பொது அடிப்படை வசதிகளை மேன்படுத்தல் அவற்றிற்கு அவசியமான சகலதும் ஏற்படுத்தப்படும்.
நாட்டின் அபிவிருத்தியின் ஒரு படியாக கிராமிய வீதி அபிவிருத்தியை ஆரம்பித்துள்ளோம்.
இன்று நீர்கொழும்பில் இத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது எமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த முன்மாதிரி நாடு பூராகவும் எடுத்துச் செல்லப்படும்.
நீர்கொழும்பு மட்டுமல்ல, கம்பஹா மாவட்டம் மட்டுமல்ல முழு நாடும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதே எமது இலக்கு எனக்கு கூறினார்.
இவ் ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் ருவன் கழுதரவிதானவும் கலந்துகொண்டார்.










