புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை வரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் கேள்விக்கு ஏற்ப பயணத் தடவைகளின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் இலக்கம் 6075
கொழும்பு கோட்டை புறப்படுதல் – பி.ப. 12.45
மட்டக்களப்பு சென்றடைதல் – பி.ப. 08.07
ரயில் இலக்கம் 6076
மட்டக்களப்பு புறப்படுதல் – மு.ப. 04.00
கொழும்பு கோட்டை சென்றடைதல் – மு.ப. 11.30
மேலும், எல்ல ஒடிஸி (Ella Odyssey) சுற்றுலா ரயில் சேவையை நாளை (07) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அம்பேவெலவிலிருந்து பதுளை வரை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கும் பயணிகள் கேள்வியின் அடிப்படையில் பயணத் தடவைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் இலக்கம் 1043
அம்பேவெல புறப்படுதல் – பி.ப. 01.30
பதுளை சென்றடைதல் – பி.ப. 04.15
ரயில் இலக்கம் 1044
பதுளை புறப்படுதல் – மு.ப. 07.45
அம்பேவெல சென்றடைதல் – மு.ப. 10.58
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலை நாட்களில், நேற்று (05) மற்றும் இன்று (06) முதல் நாவலப்பிட்டி – ஹட்டன் இடையிலும், கண்டி – வத்தேகம இடையிலும் பின்வருமாறு ரயில் சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவிய அனர்த்த நிலையின் பின்னர் இந்த மார்க்கங்களில் ரயில்கள் சேவையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.
வத்தேகம – கண்டி
வத்தேகம புறப்படுதல் – மு.ப. 05.45
கண்டி சென்றடைதல் – மு.ப. 06.30
கண்டி – வத்தேகம
கண்டி புறப்படுதல் – பி.ப. 02.00
வத்தேகம சென்றடைதல் – பி.ப. 02.39
ஹட்டன் – நாவலப்பிட்டி
ஹட்டன் புறப்படுதல் – மு.ப. 05.00
நாவலப்பிட்டி சென்றடைதல் – மு.ப. 06.29
நாவலப்பிட்டி – ஹட்டன்
நாவலப்பிட்டி புறப்படுதல் – பி.ப. 02.12
ஹட்டன் சென்றடைதல் – பி.ப. 03.11










