ஏ.எஸ்.எம்.ஜாவித்
புனித நோன்பை முன்னிட்டு கணவனை இழந்த பெண்கள் மற்றும் வருமானம் குறைந்த வறிய குடும்பங்களுக்கு இளம் முஸ்லிம் மாதர் அமைப்பினால் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் நலன் விரும்பி இருவரினால் பண உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
தெமடகொட வை.எம்.எம்.ஏ. தலைமைக் காரியாளலயத்தில் வைத்து இளம் முஸ்லிம் மாதர் அமைப்பிப்பின் தலைவி தேசமாண்ய பவாஸா தாஹா தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கே மேற்படி உணவுப் பொதிகள் கடந்த சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
அமைப்பின் செயலாளர் திருமதி சுரையா றிஸ்வி, பொருலாளர் ஹனீஸ் மலிக் உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் அமைப்பின் ஆலோசகர் காலித் பாறுக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.