2025 செப்டம்பர் 19ம் திகதி புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மது ரிபாயிஸ் முஹம்மது ஷவ்வாப் அவர்கள் மும்மொழிகளிலும் சேவை புரியும் திறனோடு, புத்தளத்தின் முதலாவது Certified Trainer in Human Talent Development ஆகவும் புத்தளத்தின் மற்றுமோர் தொழில் வழிகாட்டல் ஆலோசகராகவும் (Career Counselor) உத்தியோக பூர்வ அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.
சிலோன் கெரியர் கயிடன்ஸ் எசோசியேசன் (Ceylon Career Guidance Association – CCGA) மற்றும் இண்டஸ்ட்ரியல் எடியுகேஷன் கெம்பஸ் (Industrial Education Campus) ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய பட்டமளிப்பு விழா, இன்று (19) பிஎம்ஐசிஎச்-இல் விமர்சையாக நடைபெற்றது. அந்நிகழ்விலேயே அவருக்கு இரு பட்டங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
தனது இந்த நெடிய பயணத்தில் பெற்றோர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தினமும் உறுதுணையாக இருந்த சமூகத்தின் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த ஷவ்வாப், மேலும் முன்னேற்றத்திற்காக வல்ல இறைவனின் அருள்பாலிப்பைப் பிரார்த்தித்தார்.










