புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் வருடாந்த 4வது பொதுக்கூட்டம் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி IBM மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக, ஜெசா மருத்துவமனையில் MBBS டாக்டர்,
முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர், முன்னாள் MOH, முன்னாள் SMO டாக்டருமான திரு.ரசாக் ஜவ்ஷீக் அவர்களும் கௌரவ அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் FBS இன் முன்னாள் வெளி வாரிய உறுப்பினர்,சர்வதேச மனிதாபிமான நிபுணர், கனடா பல்கலைகழகத்தின் மூத்த திட்ட அதிகாரியுமான திரு. ஸ்ரீ சுதர்சன் அவர்களும்,
வணிக கடற்படை தலைமை அதிகாரி திரு. ஆர். ஜெயகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில்
- 2024/25ஆம் ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்களாக கடமையாற்றிய இளங்கலை பட்டதாரிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும்
- 2025/26 ஆண்டுக்கான புதிதாக செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மற்றும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் UGAP இன் இணைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்ட இளங்கலை பட்டதாரிகளுக்கான பதவி அங்கீகாரமும்
- UGAP இனால் நடாத்தப்பட்ட நிகழ்வுகளுக்கு தொண்டர்களாக பணியாற்றிய அங்கத்தவர்களுக்கான பாராட்டு, கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றன. மேலும் UGAP இன் முன்னாள் தலைவர், தொழில் வழிகாட்டல் ஆலோசகர் மற்றும் புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் ஆலோசனை உறுப்பினருமான திரு. ஷவ்வாப்(f) அவர்களினால்
இளங்கலை பட்டதாரிகளுக்கான ஆன்லைன் வாய்ப்புக்கள், தொழில் பயிற்சி வாய்ப்புக்கள் பற்றிய வழிகாட்டால் நிகழ்வும் இடம்பெற்றது.
புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் முன்னாள் செயற்குழு தலைவர் திரு நப்(f)ரான் மற்றும் அவரது ஏனைய குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்கள் ஆற்றிய சேவைக்காக இக்கனம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, புதிதாக பொறுப்பேற்றுள்ள செயற்குழு தலைவர் திரு சஜாத் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.