இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாநகர சபைக்கு இம்முறை ஹுனுபிட்டி வட்டாரத்தில் உதைப்பந்து சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட வெற்றி பெற்ற சரூஜ் சத்தார் தனது வட்டாரத்தில் களத்தில் இறங்கி சேர் ராஸிக் பரீட் மாவத்தையில் இரு பக்கமும் காடு படர்ந்துள்ளதை துப்புரவு செய்ததுடன், வடிகான்களையும் நீர் வழிந்தோடும் விதத்தில் சுத்தம் செய்தார்.
தான் வழிநடாத்தும் "வீ ஆ றெடி" குழுமத்தின் ஒருசில அங்கத்தவர்களுடன் சேர்ந்து மாநகர சபை உறுப்பினர் சரூஜ் இந்தப் பனியைச் செய்தார். இதே போல் வட்டாரத்தின் ஏனைய வீதிகளையும் சுத்தமாக வைத்த இருப்பதற்காக இவ்வாறு செயல்படவுள்ளதாக அவர் கூறினார்.
நீர்கொழும்பு மாநகர சபை சுகாதார,கழிவு முகாமைத்துவ மற்றும் சுற்றாடல் குழுவில் அங்கத்தவரான உறுப்பினர் சரூஜ் சத்தாரிடம் மக்கள் வரி செலுத்துகின்றனர். நகர சபையில் ஊழியர்கள் உள்ளனர் அவர்களைக் கொண்டு இந்த துப்புரவு வேலைகளை செய்ய முடியாதா எனக்கு கேட்டபோது. நீர்கொழும்பு மாநகர சபையில் 220 தொழிலாளர்களை சேவைக்கு உள்வாங்கியுள்ளனர். ஆனால் அவர்களில் 40 மேற்பட்டவர்கள் நகர சபையில் வேறு வேலைகளுக்கு அமர்தியுள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிழவுகின்றன.
எமது பிரதேசத்தை சுத்தமாக வைத்திருப்பது எமது பொறுப்பு நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். எனவே நான் எமது "வீ ஆ றெடி" குழும அங்கத்தர்வர்களை கொண்டு இந்தப் பனியை செய்ததாக கூறினார்.
தொழிலாளர்களாக ஆட்சேர்த்தபின் வேறு வேலைக்கு அமர்த்தியுள்ளது தொடர்பாக சபையில் வினவ உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.