(அஜ்வாத் பாஸி)
புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர் சின்னம்) சார்பில் கொழும்பு மாவட்ட வேட்பாளராக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌஸி 10.10.2024 வேட்பாளர் மனுவில் கையொப்பமிட்டார்.
சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். பௌஸியின் புதல்வரான நௌஸர் பௌஸி, இரு தடவைகள் மேல் மாகாண சபையின் உறுப்பினராக கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்று கொழும்பு மாவட்ட மூவின மக்களுக்கும் சிறப்பான சேவை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.