நாட்டில் புகைப்பிடித்தலால், நாளொன்றுக்கு 50 முதல் 60 மரணங்கள் பதிவாவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 16 இலட்சம் பேர் புகைப்பிடிப்பதுடன், அதற்காக நாளொன்றுக்கு 50 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவு செய்கின்றனர்.
புகைப்பழக்கம் காரணமாக, அதிகளவான மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, மக்கள் மத்தியில் புகைப்பழக்கம் 9 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது