இஸ்மதுல் றஹுமான்
நான்கு கோடி ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப் பொருட்களுடன் அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் எடுத்து வந்த மூன்று விமானப் பயணிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நபரையும் கைது செய்ததாக விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
விமானப் பயணிகளான கொழும்பு 15 சேர்ந்த 26 வயது இளைஞன், கொழும்பு, கிரான்பாஸைச் சேர்ந்த 25 வாலிபன் மற்றும் பதுள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொண்டுவந்த பயணப் பொதிகளில் பிஸ்கட் மற்றும் முறுக்கு பக்கட்டுகளில் இப் போதைப் பொருட்கள் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 01 கிலோ கிராம் 616 கிராம் ஹஷீஷ் போதைப் பொருளும், 01 கிலோ கிராம் 762 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளும் இருந்துள்ளன.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அவர்களை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வருகினறனர்