பிரித்தானியாவில் குடியுரிமை பெற புதிய கட்டுப்பாட்டினை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
குடியேற்ற அமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் இறுக்கமாக்குவதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையான விசா கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் குடியுரிமை
அதற்கமைய, பிரித்தானியாவில் குடியுரிமை பெற இனிமேல் 10 வருடங்கள் காத்திருக்க வேண்டுமென பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுவரை காலமும் 5 வருடங்களில் குடியுரிமை வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.