பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘கூகுள் குட்டப்பா’ படத்திலன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் தர்ஷனுக்கு ஜோடியாக அவருடன் பிக்பாஸ் நிக்ழச்சியில் பங்கேற்ற லோஸ்லியா நடித்திருந்தார்.
இந்நிலையில், தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில், ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்த நிலையில், இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நடிகர் தர்ஷன் தரப்பும் முறைப்பாடு அளித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, இரு தரப்பு முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தற்போது ஜெ.ஜெ.நகர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.