பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் ஆன்மீக குரு, அமைதித் தூதுவர் மற்றும் வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 18.05.2024 இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவர் 19.05.2024 நுவரெலியாலுள்ள (சீதாஎலிய) ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் வாழும் கலையின் 12 திறன் மேம்பாட்டு மையங்களை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.