சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் பியகம பிரதேசத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
அமைச்சர் அனுர ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல, பிரதேச சபைத் தவிசாளர் குமாரப்பெலி மற்றும் தனியார் நிறுவனமொன்று இணைந்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
நிலவிய வெள்ள நிலைமையால் பியகம பிரதேசம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியேற வரும்போது காணப்படும் பிரதான பிரச்சினைகளில் ஒன்று, வீதிகளின் இருமருங்கிலும் இவ்வாறு குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்குத் தாமதமாவதால் அதிக துர்நாற்றம் வீசுவதாகும்.
இந்நிலைமையைத் தவிர்ப்பதற்கான ஒரு துரித வேலைத்திட்டமாகவே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதாரம் மற்றும் சுற்றாடல் விவகாரங்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களாக இந்த விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
எவ்வாறாயினும், 07.12.2025 மாலையாகும் போது இப்பிரதேசத்தில் உள்ள குப்பைகளை முற்றாக அகற்றி இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடிந்துள்ளது.










