பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், பல மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் மஹியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து 30 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்து தொகுதியுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வில்பத்து, ரிதிகல மற்றும் மஹியங்கனை வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் நேற்று குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, நாட்டில், ஒரே இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய கஜமுத்துத் தொகுதி இதுவென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
30 கஜமுத்துக்கள், யானைத் தந்தத்தின் பகுதிகள், கருங்காலி மரப் பகுதிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, விலங்குகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் பொறிகள் மற்றும் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையாகப் பாதுகாக்கப்பட்ட தாவரமான தம்பு தாவரத்தின் பகுதிகள் போன்றன மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேகநபர் யானைத் தந்தங்களைப் பயன்படுத்தி பல்வேறு கலைப் பொருட்களை தயாரித்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

October 18, 2025
0 Comment
112 Views









