பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த கார், மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து 27.07.2024 மாலை இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினரின் கார், கிளிநொச்சி 155 கிலோ மீற்றர் தூண் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், எம்.பி.யின் வாகனத்தின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.