பி.ப 5.00 மணி வரை இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), புகையிலை வரிச் சட்டத்தின் கீழான கட்டளை, தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 07ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாவது மதிப்பீடு) விவாதம் இன்றி நிறைவேற்றவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர் நண்பகல் 12.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மீதான ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.