அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று (16) நிறைவடையவுள்ளது.
இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மூன்றாம் தவணையின் முதலாவது கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது










