பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற முக்கோண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, பாகிஸ்தான் அணியுடன் 14.02.2025 நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதன்படி, பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில் 243 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 45.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து இலக்கை அடைந்து வெற்றியைப் பதிவு செய்தது.