பல் மருத்துவ பட்டதாரிகள் 86 பேரை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்ய சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட நியமனக் கடிதங்கள் இன்று (08) காலை 9.30 மணிக்கு கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் வழங்கப்படவுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.