பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் தற்போது பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
08 வருடங்களாக நிலவி வரும் சம்பள பிரச்சினை, மாதாந்த கொடுப்பனவு போன்ற பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் கடந்த 12 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துடன் 13.05.2024 காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.