2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2024/2025 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தேவையான ‘Z’ மதிப்பெண் வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு பாடநெறிகளுக்கு சேர தேவையான குறைந்தபட்ச Z மதிப்பெண்கள் UGC இன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடநெறி மற்றும் பல்கலைக்கழகத்தைப் பின்வரும் முறைகள் மூலம் அறிந்துகொள்ளலாம்:
- பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ugc.ac.lk மூலம்.
- பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தகவல் மையத்தை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்: 011-2695301, 011-2695302, 011-2692357, 011-2675854.
- பல்கலைக்கழக சேர்க்கைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பது SMS மூலம் அறிவிக்கப்படும்.