(அஷ்ரப் ஏ சமத்)
அரசியல் கட்சிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்று கூடி இலங்கையில் வாழும் சகல சமூகங்களும் இணைந்து பலஸ்தீன் நாட்டின் விடுதலைக்காக கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினார்கள்.
இப் ஆர்ப்பாட்டம் 15.08.2025 பி.பகல் 03 மணியலவில் பொரளை கனத்தை இல் ஆரம்பித்து பேஸ்லைன் வழியாக வந்து கம்பல் பாக்கில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ், ஜே.வி.பி இளைஞர் அணி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஜம்மியத்துல் உலமா செயலாளர் உட்பட பௌத்த குரு உட்பட பலரும் இஸ்ரவேலை எதிர்த்து அவர்கள் உடனடியாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்துள்ளார்.
அத்துடன் பலஸ்தீன நாட்டினை சுதந்திரமாக விடுவிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள அமேரிக்காவுக்கு எதிராகவும் பேசினார்கள்
அத்துடன் இலங்கை அரசாங்கம் இஸ்ரவேலருக்கு இலவச விசா வழங்குவதை நிறுத்துதல் அவர்களது மத நிறுவனங்கள் இலங்கையில் இயங்குகின்றன அவற்றை உடனடியாக முடுதல் இலங்கையர்களை இஸ்ரேவேல் தொழிலுக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்துதல் போன்ற தீர்மானங்களை பேசினார்கள்.

