இஸ்மதுல் றஹுமான்
பெரிய வெள்ளிக்கிழமையின் அர்தத்தை கொடுப்போம், இஸ்ரேல் மூலம் பாலஸ்தீனத்தில் இடம் பெறும் இனப்படுகொலைக்கு 18 மாதங்கள். அனைத்து அடக்குமுறைகளுக்கும்,
இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்!
பாலஸ்தீன மக்களுக்கு எமது ஆதரவு எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு “கிதுசர” குழுவினர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று 18 ம் திகதி காலை நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இடம்பெற்றது.
இங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலஸ்தீனில் இடம்பெறும் குழந்தை மற்றும் இனப்படுகொலைகளை உடன் நிறுத்து, பாலஸ்தீன குழந்தைகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்து, அன்று முல்லிவைக்கால் இன்று பலஸ்தீன் காஸா, இஸ்ரேலிய தலைவர்கள் இன்று பலஸ்தீனில் இயேஸுவை கொலை செய்கின்றனர், இஸ்ரேல்- அமெரிக்க அராஜகத்தை உடன் நிறுத்து போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.










