பலஸ்தீனம் என்பது தனிநாடுதான் என்று பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
அந்தவகையில் பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா, அன்டோரா மற்றும் மொனாகோ ஆகிய நாடுகளும் பலஸ்தீன அரசை அங்கீகரிக்க முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் பலஸ்தீன அரசை பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா, அன்டோரா மற்றும் மொனாகோவும் பலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்றும் ஜனாதிபதி மெக்ரோன் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் குறித்த ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க முன்வந்துள்ளன.
இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா,சிங்கப்பூர், கேமரூன், பனாமா, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீரிக்க மறுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது