கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுடலை குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்றைய தினம் 17.10.2023 சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் 18,750 லிட்டர் கோடாவும் 80 லீற்றர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸார் கண்டவுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராமநாதபுரம் பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்
இதே போன்று கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றுவது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் 17.10.2023 வீதிச் சோதனையின் மூலம் இரண்டு டிப்பர் வாகனங்களும் ஓர் உழவு இயந்திரமும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் பொலிஸ பிணையில் விடுவிக்கப்பட்டனர்.