கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் 1.5% ஆக இருந்த பணவீக்கம், ஒக்டோபர் மாதத்தில் 2.1% ஆக உயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் உணவுக் குழுவின் பணவீக்கம் 3.5% வரை அதிகரித்துள்ள நிலையில், செப்டெம்பர் மாதத்தில் இது 2.9% ஆகப் பதிவாகியிருந்தது.
செப்டெம்பர் மாதத்தில் 0.7% ஆகப் பதிவாகியிருந்த உணவு அல்லாத குழுவின் பணவீக்கம், ஒக்டோபர் மாதத்தில் 1.4% வரை அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.










