தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 22 மாணவர்களை வகுப்புகளில் இருந்து தடை செய்ய பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்துக்கு புதிதாக வந்த மாணவர்களை பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
புதிய மாணவர்கள் குழுவினரை கொடூரமாக பகிடிவதை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து மூன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 22 மாணவர்கள் இந்த வகுப்புகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.
பகிடிவதை செய்த சம்பவம் குறித்து பொலிஸாரும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.