2026.03.19
ஏ.எஸ்.எம்.ஜாவித்
புனித ஸவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்படவில்லை நாளை மறுதினம் சனிக்கழமை (21) நோன்புப் பெருநாள்
ஹிஜ்ரி 1447 புனித ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 19ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழு தலைவர். மெளலவி எம்.பி.எம். ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்றது
இதன்போது நாட்டின் எப்பாகங்களிலும் ஸவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டபதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லையென பிறைக் குழு அறித்தது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள். பிறைக் குழு உறுப்பினர்கள் .அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் மெளலவி புர்ஹானுதீன் உள்ளிட்ட பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டல திணைக்கள அதிகாரி மொஹமட் சாலிஹீன், மற்றும் ஏனைய பள்ளி வாசல்கள், ஸாவியாக்கள்இ, தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பிறை தென்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதனையும் புனித ரமழானை நாளை வெள்ளிக்கிழமை 30 ஆக பூர்த்தி செய்து நாளை மறுதினம் சனிக்கிழமை (21) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பிறைக் குழுத் தலைவர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.










