நெக்ஸ்ட் கொம்யூனிட்டி பொஃன்டேஷனின் ரமழான் உதவித் திட்டம் ஐந்தாவது வருட நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை 17.03.2026 அன்று கொழும்பு கொட்டாஞ்சேனை க்ரீன் லேன் இல் அமைந்துள்ள பத்தியுதீன் மஹ்மூத் பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் கொழும்பு வாழ் மக்களில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களை தெரிவு செய்து அவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நெக்ஸட் கொம்யூனிட்டியின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.எம். இன்பாஸ், அமைப்பாளர் எஃப்.எஸ.எம். ஹஸ்ஸன் உட்பட இதன் ஆலோசகர்களான அஷ் ஷெய்க். ஹைதர் அலி, உளவியல் பயிற்றுவிப்பாளர் சாபிர் ஹாஷிம் ஆகியோரும் அப்துர் ரஹ்மான், அலி மற்றும் நெக்ஸட் கொம்யூனிட்டியின் நிறைவேற்று அதிகார குழு உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.










