( ஐ. ஏ. காதிர் கான் )
அண்மையில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, நீர்கொழும்பு பலகத்துறை அல் – பலாஹ் கல்லூரியிலிருந்து 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
எம்.ஆர்.எம். ரைஹான் (164), எம்.ஆர். அப்துர்ரஹ்மான் (152), எம்.எஸ். ரயாஉல் இஸ்லாம் (152), எம்.எஸ். ஸஹ்லா (143), ஆஷியா ரொஸான் (143), எம்.யூ.எப். சிம்ரா (143), எம்.என். யூஸுப் (140), எம்.எஸ். அம்மார் (138), எம்.எஸ். ஷம்ளா (137), எம்.இஸட்.எப். ஸீனா (135), ஐ.எப். ஸைபா (134) ஆகிய மாணவ மாணவியரே சித்தியடைந்துள்ளனர். இம்முறை 136 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், 85 மாணவர்கள் 70 இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளதாக, கல்லூரி அதிபர் எம்.யூ. பாயிஸ் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில், நீர்கொழும்பு அல் – பலாஹ் கல்லூரி இம்முறை 164 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
அண்மையில் (2025.09.08) இக்கல்லூரியில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில், மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இப்பெறுபேறுகளைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட வகுப்பு ஆசிரியைகளான எம்.இஸட்.எப். பர்ஷிதா, எம்.ஏ.எப்.எப். ஜஹான், எஸ். சுபாஷினி, திருமதி எம்.என்.எப். நப்லா ஆகியோருக்கும், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், பழைய மாணவர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், கல்லூரி அதிபர் எம்.யூ. பாயிஸ், தனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.