இஸ்மதுல் றஹுமான்
இலங்கை விமானப் படையினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் ஒன்றை நீர்கொழும்பு, றப்பர்வத்த தக்வா பள்ளிவாசலில் நடாத்தினர்.
நீர்கொழும்பு நஹ்தா அமைப்பு (NAHDA Oganiciation) நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்தது.
விமானப் படை லீடிங் எயார் கிராப்ட் மென் எம். ஆர். திலீபன் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இந்த மருத்துவ சிகிச்சை முகாமில் 04 விமானப்
படை வைத்தியர்கள், 15 தாதிகள், 20 உதவியாளர்கள் பங்குகொண்டுள்ளதாக திலீபன் தெரிவித்தார். இங்கு பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. மேலும் பரிசோதனைகளும் இடமொபெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டார்.










