இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு முஸ்லிம் மாதர் சங்கம் ஏற்பாடு செய்த கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் பெரியமுல்லை கோல்டன் பெலஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது. மாதர் சங்கத் தலைவி றிஸ்மியா றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்கா மல்லவாரச்சி கலந்து சிறப்பித்தார். பிரதம அதிதியை சங்கத் தலைவி மலர்ச்சென்டு வழங்கி வரவேற்பதையும், கண்காட்சியை பார்வையிடுவதையும், பரிசில்கள் பெற்ற மாணவிகளையும் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் காணலாம்.










