இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த 02.06.2025 திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.
மாநகர சபைக்கு வருகை தந்த புதிய நகரபிதாவை மாநகர ஆணையாளர் நுவனி சுதசிங்க வெற்றிலை கொடுத்து வரவேற்றனர். நீர்கொழும்பு மாநகர சபை நகர பிதாவின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, மாநகர ஆணையாளர் நுவனி சுதசிங்க, உயர் அதிகாரிகள், மாநகர சபைக்கு தேசிய மக்கள் சக்தியில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் புதிய மேயர் அதிகாரிகளுடனும் புதிய உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.