இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு பிரதேச புகையிரத மார்க்கத்தில் 73 புகையிரத கடவைகளில் 23 புகையிரத கடவைகளை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே பராமரிக்கப்படுகின்றன. இங்கு மூங்கில் மரத்தினாலான கேட் பொறுத்தப்பட்டுள்ளன.
இவை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
நீர்கொழும்பு பாதையில் 9.46 மைல் கல்லில் இருந்து 29.52 மைல் கல்வரை 73 புகையிரத கடவைகள் உள்ளன. இவற்றை (Bell & Signal) ஒலி மற்றும் சமிஞ்சை முறையில் புகையிரத சமிஞ்சை கட்டுப்பாட்டு பிரிவினரால் பராமரிக்கப்படுவதுடன் 23 புகையிரத கடவைகளை பொலிஸார் பராமரிப்பதாக சமிஞ்சை பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸாரால் பராமரிக்கும் மூங்கில் மர கேட் பொறுத்தப்பட்டுள்ள கடவைகளில் அங்கு கடமையில் உள்ள ஊழியர்கள் உரிய முறையில் கடமையாற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளன.
இங்கு புகையிர கடவைகளுக்கு சமீபமாக வசிப்பவர்களையே பெரும்பாலும் பொலிஸார் சேவைக்கு அமர்ந்துகின்றனர். அவர்களுக்கு மாதாந்தம் 7500 ரூபா வழங்கப்படுகின்றன. இந்த
தொகை தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு போதாது என சிலர் கடமையிலிந்து நீங்குகின்றனர்.
அவ்வாறு கடமையிலிருந்து நீங்கிய இடத்தில் தான் அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தையும் மகனும் புகையிரதத்தில் மோதி தந்தை அதே இடத்தில் பலியானதுடன் மகன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்னும் சிகிச்சை பெற்றவருகிறார்.
இதே போன்று பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் மோதி பல உயிர்கள் இதற்குமுன்னரும் காவுகொள்ளப்பட்டன.
மூங்கில் மர கேட் உள்ள இடங்களில் உரிய முறையில் சேவை இடம்பெறுவதில்லை என அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை பொலிஸாரும் அவதானிப்பதில்லை.
சில இடங்களில் புகையிரதம் வருவது தென்படுவதில்லை. இரு மருங்கிலும் காடு படர்ந்துள்ளன. அல்லது வலைவுகள் மற்றும் கட்டங்களினால் தென்படுவதில்.
ஊழியர்கள் கடமையில் இல்லாத இடங்களில் அது குறித்து அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனை எத்தனை பேர் அவதானிப்பார்கள் அல்லது சகல மொழிகளிலும் போடப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே.
புகையிரத சமிஞ்சை கட்டுப்பாட்டுப் பிரிவினரால் நடததப்படும்
புகையிரத கடவைகளில் மூன்று தற்போது செயல்படுவதில்லை என கூறிய அதிகாரி ஒருவர் அவ்விடத்தில் அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் ஆபத்தான புகையிர கடவைகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் இதனை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, இவ்விடயம் தொடர்பாக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க கவணம் செலுத்துவதாக கூறினார்.
எது எவ்வாறாயினும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஊடாகவாவது மூங்கில் மர கேட்டுகளை
அகற்றி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் புகையிர கடவைகளை கடப்பதற்குறிய பாதுகாப்பான கேட்டுகளை பொறுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.