இஸ்மதுல் றஹுமான்
கத்தோலிக்க சபையின் கொழும்பு பேராயர் பிரிவின் நீர்கொழும்பு பிராந்திய பொறுப்பாளராக எட்டு வருட சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு பிரிந்து செல்லும் அருட்தந்தை சிஸ்வான் ஜோஸப் டி குரூஸ் அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வும், இப் பிராந்தியத்திற்கு பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை சாந்தி குமார் வெளிவிட்டவை வரவேற்கும் நிகழ்வும் நீர்கொழும்பு, தம்மிட்ட கார்தினல் குறே மத்தியஸ்தானத்தில் நேற்று 13ம் திகதி நடைபெற்றது.
நீர்கொழும்பு பிராந்திய கத்தோலிக்க மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்கு இரு அருட்தந்தைகளும் வரவேற்று அழைத்து வரப்படுவதையும் சேவை செய்த பிதா சிஸ்வான் ஜோஸப் டி குரூஸ் அவர்களுக்கு பிராந்திய கத்தோலிக்க மத்திய குழு செயலாளர் இமானுவெல் பியும்வர்தன நினைவுச் சின்னம் வழங்குவதையும் கலந்துகொண்ட சர்வமதத் தலைவர்கள், பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் காணலாம். இவ்வைபவத்தில் கத்தோலிக்க மத்திய குழுவின் சேவைக்காக ஊடகத் துறையில் பங்களிப்புச் செய்த பிராந்திய ஊடகவியலாலர்களான ஜயமஹ, ரேமன் அபொன்ஸு, எம்.எம். இஸ்மதுல் றஹுமான் ஆகியோர்களும் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
படம்: நீர்கொழும்பு நிருபர்