இஸ்மதுல் றஹுமான்
பல்லின, பல்லின மக்கள் வாழும் நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவின் மக்களிடையே ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை அழகாக பிரதிபலிக்கும் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு பெரியமுல்ல கோல்டன் பெலஸ் வரவேற்பு மண்டபத்தில் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக மல்லவராச்சி தலைமையில் நடைபெற்றது.
2012 ஆம் ஆண்டுமுதல் நடாத்தப்பட்டு வருகின்றது. பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் முஸ்லிம் ஊழியர்களின ஒத்துழைப்புடன் இந்த இப்தார் வைபவத்தில் சர்வ மதத் தலைவர்கள், விளையாட்டு துறை பிரதி அமைச்சரும் நீர்கொழும்பு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுகத் திலகரத்ன, நீர்கொழும்பு மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த, அரசியல் பிரமுகர்கள், பிரதேச முஸ்லிம் மற்றும் பிற இன மக்கள், அரசாங்க அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். இப்தார் விசேட உரையை மொளவி எம். எப். எம். பரூத் சிங்கள மொழியில் நிகழ்த்தினார்.










