இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் கலாச்சார பிரிவு 13 வது முறையாகவும் ஏற்பாடு செய்த பிரதேச மத ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்
இப்தார் நோன்பு துறக்கும் வைபவம் நீர்கொழும்பு கோல்டன் பெலஸ் வரவேற்பு மண்டபத்தில் 20ம் திகதி வியாழக்கிழமை இடம் பெற்றது. பிரதேச செயலாளர் ரசிக்கா மல்லவாரச்சி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களான விஜயபால மென்டிஸ் சர்வதேசம் பெளத்த நிலையத்தின் பிரதான பிக்கு தெல்வெல அங்கீரஸ தேரர், நீர்கொழும்பு வலய கத்தோலிக்க சபை தலைவர் சாந்திகுமார வெளிவிட்ட பிதா, சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு கிருபாகரன் குருக்கள், நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மெளலவி ஐ.எல். ஹனீபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நோன்பு தொடர்பான விசேட உரையை நீர்கொழும்பு அல் புர்கான் அல் கரீம் அரபுக் கல்லூரி அதிபர் மெளலவி எம்.எப்.எம். பரூத் சிங்களத்தில் நிகழ்த்தினார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சகல இன மக்களும் இதில் கலந்துகொண்டனர்.