இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு கல்வி வலயத்தில் 32 அதிபர்களுக்கும் 227 ஆசிரியர்களுக்கும் வெற்றிடம் நிழவுவதாக நீர்கொழும்பு ஒருகிணைப்புக் குழு கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இங்கு கருத்துத் தெரிவிக்கும் போது நீர்கொழும்பு கல்வி வலயம் நீர்கொழும்பு, கட்டான, ஜாஎல ஆகிய கோட்ட கல்வி பிரிவுகளை உள்ளடக்கியதாகும். நீர்கொழும்பு கோட்டப் பிரிவில் சிங்கள மொழி பாடசாலைகள் 27, தமிழ் மொழி பாடசாலைகள் 03, தேசிய பாடசாலைகள் 02, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் 05 உள்ளன.
அதிபர் தரத்தில் 74 பேர் இருக்க வேண்டிய நிலையில் 42 பேர்களே உள்ளனர். 32 வெற்றிடங்கள் நிழவுகின்றன. 1241 ஆசிரியர்கள் தேவையான போதும
1014 ஆசியர்களே கடமையில் உள்ளனர். 227 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 15 பேர் உள்ளனர். ஐவருக்கு வெற்றிடம் உள்ளது. கல்விசார ஊழியர்கள் 81 தேவையான இடத்தில் 58 பேரே இருக்கின்றனர். 22 பேருக்கு வெற்றிடம் உண்டு.
ஐந்து பாடசாலைகளில் மாணவர் தொகைக்கு ஏற்ப மலசலகூட வசதிகள் இல்லை. இதில் தமிழ் மொழி மூல பாடசாலைகள் இரண்டுக்கு 17 மலசலகூட தேவையாக உள்ளன.
கொழும்பில் அதிபர், ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனதால் அவர்களை பற்றாக்குறை நிழவும் பாடசாலைகளுக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.